Friday, September 26, 2008

பக்தி

மனதின் புழுதியை பெருக்கி,
வெளி ஒலியை குறைத்து,
உள் ஒளியை பெறுக்கி,
பக்தியின் வத்தியை ஏற்றி வைத்துப்பார்...
உன் காலடியில் இந்த பார்.

பிச்சை

தெருவோடு திருவோடு கையேந்தி போவான்
உயிரோடு வாழ்வதற்கு ஆசை கொள்வான்
வயிறோடு பசியை சுமந்து செல்வான்
இச்சைகள் நிறைவேறாத பிச்சைக்காரன்

விவசாயம்

பரந்த மனம் எனும் நிலத்தில்
நம்பிக்கை எனும் விதை தூவி
mwk; vd;gJ cuk; Mf
ஆசி எனும் மழை பொழிந்தால்
பொறுமை எனும் பயிர் வளர்ந்து
உண்மை எனும் அருவாளால் அறுவடை செய்து
நன்றி, சுயநலம் - இதை அரிசி, நெல் போல் பிரித்தால்...
வாழ்க்கை எனும் தானியம் கிடைக்கும்.